சுடச்சுட

    

    விபத்துகள் அடிக்கடி நேரிடும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை: காவல் துறை கூடுதல் இயக்குநர்

    By தருமபுரி  |   Published on : 02nd January 2017 09:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சாலை விபத்துகள் அடிக்கடி நேரிடும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாக மாநில காவல் துறை கூடுதல் இயக்குநர் கே.சி. மஹாலி தெரிவித்தார்.
     தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சாலை விபத்துகளைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் செயல் முறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
     மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் கூட்டத்துக்கு தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் முன்னிலை வகித்தார்.
     கடந்த 2016-ல் தருமபுரி மாவட்டத்தில் நடைபெற்ற விபத்துகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூடுதல் காவல் துறை இயக்குநர் டாக்டர் கே.சி. மஹாலி பேசியது:
     2016ஆம் ஆண்டில் 1482 சாலை விபத்துகள் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில் 338 விபத்துகளில் சுமார் 365 பேர் உயிரிழந்துள்ளனர். 1,162 விபத்துகளில் சுமார் 1,768 பேர் காயமடைந்துள்ளனர்.
     தேசிய நெடுஞ்சாலைகில் 279 விபத்துகளும், மாநில நெடுஞ்சாலைகளில் 899 விபத்துகளும், மற்ற சாலைகளில் 304 விபத்துகளும் நடந்துள்ளன. இதில் 613 விபத்துகள் மாலை 3 மணி முதல் இரவு 9 மணி வரை நடந்துள்ளன. இந்த விபத்துகளில் 21 முதல் 60 வயதுவரையுள்ள 233 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.
     550 இரு சக்கர வாகனங்கள், 288 சிறிய ரக வாகனங்கள், 397 கனரக வாகனங்கள், 357 இதர வாகனங்கள் என மொத்தம் 1,592 வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.
     மோட்டார் வாகனச் சட்டத்தின்கீழ் 1.03 லட்சம் வாகனங்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் இருசக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணியாமல் சென்ற வழக்குகள்- 61,549, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய வழக்குகள்- 3023.
     தேசிய நெடுஞ்சாலையில் காரிமங்கலம் காவல் நிலைய எல்லையில் அகரம் சந்திப்பு, கெரகோடஅள்ளி சந்திப்பு, பெரியாம்பட்டி சந்திப்பு, மாட்லாம்பட்டி சந்திப்பு, மதிகோன்பாளையம் காவல் நிலைய எல்லையில் குண்டல்பட்டி சந்திப்பு, முத்துப்பட்டி, தொப்பூர் காவல் நிலைய எல்லையில் தொப்பரகாம்பட்டி சந்திப்பு, பாளையம்புதூர் சந்திப்பு, வெள்ளக்கல் சந்திப்பு, கட்டமேடு சந்திப்பு, ஆஞ்சநேயர் கோவில், மாநில நெடுஞ்சாலையில் தருமபுரி ராமக்காள் ஏரி, அரூர் வேளாண் அலுவலகம், நாக்சினாம்பட்டி ஏறி, கோபிநாதம்பட்டி கூட்டுரோடு சந்திப்பு, கடத்தூர் காவல் நிலைய எல்லையில் ஒடசல்பட்டி கூட்டுரோடு, பாப்பிரெட்டிப்பட்டி காவல் நிலைய எல்லையில் சாமியாபுரம் சந்திப்பு, மஞ்சவாடி கணவாய், பாலக்கோடு காவல் நிலைய எல்லையில் பாலக்கோடு மற்றும் மகேந்திரமங்கலம் காவல் நிலைய எல்லையில் பிக்கனஅள்ளி ஆகிய இடங்களில் விபத்துகள் நேரிடாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றார் மஹாலி.
     மண்டல போக்குவரத்து அலுவலர் டி.வி. சிவாஜி, காவல் துணைக் கண்காணிப்பாளர் எம். சோமசுந்தரம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai