சுடச்சுட

    

    கணினி இயக்குநர் பணி: ஓய்வுபெற்ற காவலர்கள் விண்ணப்பிக்கலாம்

    By தருமபுரி,  |   Published on : 03rd January 2017 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காவலர் கேன்டீனில் கணினி இயக்குநர் பணிக்கு, ஓய்வுபெற்ற காவலர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து, தருமபுரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்ட ஆயுதப் படை வளாகத்தில் காவல் துறை சார்பில் செயல்பட்டு வரும் கேன்டீனில், தமிழ் மற்றும் ஆங்கிலம் தட்டச்சு தெரிந்த கணினி இயக்குநர் பணியிடத்துக்கு ஓய்வுபெற்ற காவல் துறையைச் சேர்ந்த ஒருவர், தாற்காலிகமாக மாதம் ரூ. 7 ஆயிரத்து 500 ஊதியத்தில் பணியமர்த்தப்பட உள்ளார்.
     எனவே, இப் பணியிடத்துக்கு தகுதியுள்ள ஓய்வுபெற்ற காவல் துறையினர் தங்களது சுயவிவரக் குறிப்புடன் விருப்ப மனுவை, வரும் ஜன.7-ஆம் தேதிக்குள் மாவட்டக் காவல் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai