சுடச்சுட

  

  சித்தேரியில் குடிநீர்த் தட்டுப்பாடு: மக்கள் அவதி

  By அரூர்,  |   Published on : 03rd January 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சித்தேரி ஊராட்சியில் குடிநீர்த் தட்டுப்பாடு காரணமாக பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.
   பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சியில் 60-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன. இந்த ஊராட்சியில் வேளாம்பள்ளி, சூரியக்கடை, மூலேரிக்காடு, பேரேரிபுதூர், சித்தேரி உள்ளிட்ட கிராமப் பகுதிகளுக்கு ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது.
   இந்த நிலையில், கடந்த 10 தினங்களுக்கு மேலாக சித்தேரி ஊராட்சியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லையாம். இதனால் சித்தேரி மலைப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் குடிநீர்த் தேவைக்காக பல்வேறு இன்னல்களை அடைந்து வருகின்றனர்.
   அதாவது, அரூரில் இருந்து சித்தேரி செல்லும் வழியில் வள்ளிமதுரை அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய்கள் இணைப்பில் சேதம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் சித்தேரி மலைப்பகுதியில் குடிநீர் விநியோகம் இல்லை என பொதுமக்கள் புகார் கூறுகின்றனர்.
   எனவே குழாய் இணைப்புகளை சீரமைத்து, சித்தேரி, சூரியக்கடை, வேளாம்பள்ளி, பேரேரிபுதூர் உள்ளிட்ட கிராமப் பகுதியில் நிலவும் குடிநீர்த் தட்டுப்பாடுகளை நீக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai