சுடச்சுட

    

    நலவாரிய அடையாள அட்டை: திருநங்கைகள் ஆட்சியரிடம் வலியுறுத்தல்

    By தருமபுரி,  |   Published on : 03rd January 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும் என தருமபுரியைச் சேர்ந்த திருநங்கைகளின் அமைப்பான அன்பின் நலச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
     தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாளில் சங்கத்தின் பொருளாளர் எம். ஸ்டெல்லா மேரி தலைமையில் திருநங்கைகள் அளித்த மனு விவரம்:
     திருநங்கைகள் நல வாரியத்தின் உறுப்பினர் அடையாள அட்டை தருமபுரியில் பலருக்கும் வழங்கவில்லை. பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சிலருக்கு மருத்துவச் சான்றிதழ் வழங்கி 6 மாதங்களாகியும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.
     இன்னும் பலரும் இதேபோல அடையாள அட்டை இல்லாமல் இருக்கின்றனர். இதனால் பல சலுகைகளைப் பெற முடியவில்லை.
     திருநங்கைகள் பலருக்கும் நியாயவிலைக் கடைகளில் பொருள்களை வாங்குவதற்கான குடும்ப அட்டை இல்லை.
     மேலும், சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின்கீழ் திருநங்கைகள் 11 பேருக்கு வழங்கப்பட்டு வந்த முதியோர் உதவித் தொகையும் கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டுள்ளது. இவற்றை விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. மனுக்களைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் கே. விவேகானந்தன், திருநங்கைகளுக்கு மட்டும் சிறப்பு முகாம் நடத்தி இவற்றை வழங்கலாம் என சமூக நலத் துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai