Enable Javscript for better performance
பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை- Dinamani

சுடச்சுட

    

    பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை

    By தருமபுரி,  |   Published on : 03rd January 2017 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், இளைஞருக்கு தருமபுரி மகளிர் நீதிமன்றம் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது.
     தருமபுரி மாவட்டம், மகேந்திரமங்கலம் அருகேயுள்ள சூடப்பட்டியைச் சேர்ந்தவர் பூபதி (25). இவர், கடந்த 2013-ஆம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த, பள்ளி மாணவி ஒருவரை திருமணம் செய்வதாகக் கூறி, கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
     இது தொடர்பாக, மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், மகேந்திரமங்கலம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, போக்úஸா சட்டத்தின்கீழ் பூபதியை கைது செய்தனர்.
     இந்த வழக்கு விசாரணை, தருமபுரி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
     இந்த நிலையில், திங்கள்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி, மாணவியைக் கடத்தி, பலாத்காரம் செய்த குற்றத்துக்காக பூபதிக்கு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை, ரூ.2,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai