சுடச்சுட

  

  மக்கள் குறைகேட்புக் கூட்டம்: ரூ. 1.28 லட்சம் நலத்திட்ட உதவிகள்

  By தருமபுரி,  |   Published on : 03rd January 2017 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், 12 பேருக்கு ரூ. 1.28 லட்சம் மதிப்பில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியர் கே. விவேகானந்தன் வழங்கினார்.
   நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 65 ஆயிரத்துக்கான காசோலைகள், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் சார்பில் 11 பேருக்கு முடநீக்கு உபகரணங்களும், ஒருவருக்கு சக்கர நாற்காலியும் என மொத்தம் ரூ. 1.28 லட்சத்துக்கான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
   தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டத்தில் மாவட்ட அளவில் நடத்தப்பட்ட போட்டிகளில் வென்ற 12 மாணவ, மாணவியருக்கு பாராட்டுச் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.
   மேலும், கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட 193 மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதுகுறித்த விவரங்களை மனுதாரர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
   கூட்டத்தில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) பாப்பாத்தியம்மாள், தனித்துணை ஆட்சியர் (கலால்) மல்லிகா, ஆதிதிராவிடர் நல அலுவலர் இலாஹிஜான், முன்னோடி வங்கி மேலாளர் முத்தரசு, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai