சுடச்சுட

    

    மின்பாதை அமைக்கும் பணி: புலிகரையில் 3 நாள்கள் மின் தடை

    By தருமபுரி  |   Published on : 03rd January 2017 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மின்பகிர்மான வட்டத்துக்குள்பட்ட புலிகரை துணை மின்நிலையத்தில் மின்பாதை அமைக்கும் பணி நடைபெற உள்ளதால், அங்கு மூன்று நாள்கள் சுழற்சி அடிப்படையில் மின்தடை செய்யப்பட உள்ளது.
     இதுகுறித்து, பாலக்கோடு மின்வாரிய செயற்பொறியாளர் சிவானந்தன் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: புலிகரை துணை மின் நிலையத்தில், கூடுதலாக ஒரு மின்பாதை அமைக்க உள்ளது. இதற்கான பணிகள் ஜனவரி 3, 5 மற்றும் 7 ஆகிய தேதிகளில் மேற்கொள்ளப்பட உள்ளன.
     எனவே, அன்றைய நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை, மோட்டூர், இருளப்பட்டி, மாட்டியாம்பட்டி, சுண்ணாம்பட்டி, காட்டம்பட்டி, புலிக்கல், குட்டம்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் மின்தடை செய்யப்பட உள்ளது என்றார்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai