சுடச்சுட

  

  ரயில் பாதையில் கல்கள் வைத்த வழக்கு: தருமபுரியில் நக்ஸல் கைது

  By தருமபுரி  |   Published on : 03rd January 2017 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி அருகே ரயில் பாதையில் கல்கள் வைத்த வழக்கில், நக்ஸஸ் இயக்கத்தைச் சேர்ந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
   கடந்த டிசம்பர் மாதம் 22-ஆம் தேதி நாகர்கோவில் இருந்து மும்பைக்கு சேலம் மற்றும் தருமபுரி வழியாக தாதர் விரைவு ரயில் வந்து கொண்டிருந்தது. அன்றைய தினம் நள்ளிரவு 12 மணியளவில், சேலம் மாவட்டம், காருவள்ளி அருகே வனப்பகுதியில் ரயில் வந்து கொண்டிருந்தபோது, திடீரென சத்தம் கேட்டது. இதைக் கேட்ட, ரயில் ஓட்டுநர் ரயிலின் வேகத்தை குறைத்து நடுவழியில் நிறுத்தினார்.
   அப்போது, ரயில்பாதையில் 10-க்கும் மேற்பட்ட, சிமென்ட் கல்கள் வைக்கப்பட்டு, அவை சக்கரத்தில் சிக்கி நசுங்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக, ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளிக்கப்பட்ட பின்னர், ரயில் புறப்பட்டுச் சென்றது.
   இதுகுறித்து, தகவலின்பேரில், தருமபுரி ரயில்வே போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
   இதில், ரயில் பாதையில் கல்கள் வைத்ததில் நக்ஸல் அமைப்பைச் சேர்ந்தவருக்கு தொடர்பு இருப்பது போலீஸாருக்கு தெரியவந்தது.
   இதைத் தொடர்ந்து, தருமபுரி நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் இந்த வழக்கை விசாரித்தனர்.
   இதில், நக்ஸல் அமைப்புக்கு ஆதரவாக துண்டு பிரசுரங்களை அளித்தும், அதில் தீவிரமாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டதோடு, அந்த இயக்கத்தில் இளைஞர்களை சேர்த்தது உள்ளிட்ட வழக்குகளில் பல ஆண்டுகளாக தலைமறைவாக உள்ள, தருமபுரி அருகே குப்பூர் அடுத்த ஆலங்கரை கிராமத்தைச் சேர்ந்த சீனிவாசன் (52) என்பவருக்கு, காருவள்ளி வனப்பகுதியில் ரயில்பாதையில் கல்கள் வைத்ததில் தொடர்பு இருந்தது கண்டறியப்பட்டது.
   இதைத் தொடர்ந்து, நக்ஸல் தடுப்புப் பிரிவு போலீஸார் சீனிவாசனை கைது செய்தனர். மேலும், வேறு ஏதேனும் சதிச் செயலில் ஈடுபட்டுள்ளாரா எனவும் அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai