சுடச்சுட

    

    "வாகன ஓட்டிகளிடம் கூடுதல் தொகை வசூலித்தால் புகார் தெரிவிக்கலாம்'

    By தருமபுரி  |   Published on : 03rd January 2017 09:10 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வாகன ஓட்டிகளிடம் கூடுதலாக தொகை வசூலித்தால், காவல் துறைக்கு புகார் தெரிவிக்கலாம் என மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பண்டி கங்காதர் தெரிவித்துள்ளார்.
     இது தொடர்பாக, அவர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: காவல் துறையினர் மேற்கொள்ளும் வாகனச் சோதனையின் போது, விதிகளை மீறி, வாகனம் ஓட்டுபவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அபராதம் வசூலிக்கும் நடைமுறை இருந்து வந்தது.
     இந்த நிலையில், தற்போது, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டப்படி, விதிகளுக்கு முரணாக வாகனம் ஓட்டுபவர்களிடம், நிகழ்விடத்திலேயே குற்றச் செயல்களுக்கு ஏற்ப அபராதம் வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
     இதில், ஓட்டுநர் உரிமம் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.500, மூன்று நபர்களை ஏற்றிச் சென்றால் ரூ.100, தலைக்கவசம் இன்றி ஓட்டினால் ரூ.100, அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இயக்கினால் ரூ.1000 என குற்றச் செயல்களுக்கு ஏற்ப அபராதம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     எனவே, காவல் அதிகாரிகள், நிர்ணயிக்கப்பட்ட தொகையை வசூலிக்காமல், வாகன ஓட்டிகளிடம் கூடுதலாக தொகை வசூலித்தாலோ அல்லது அதிக தொகை செலுத்த நிர்பந்தித்தாலோ, 04342-230283, 230193 என்ற தொலைபேசி எண்களிலும், 94456 52253 என்ற கட்செவி அஞ்சல் எண்ணிலும் மாவட்டக் காவல் துறைக்கு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்.
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai