Enable Javscript for better performance
கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

    By தருமபுரி,  |   Published on : 04th January 2017 10:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கரும்புக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கக் கோரி, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலை முன் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     பாலக்கோடு சர்க்கரை ஆலை விவசாயிகள் சங்கச் செயலர் பி.பாபு தலைமை வகித்தார். மாவட்டப் பொறுப்பாளர் பி.இளம்பரிதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் கே.என்.மல்லையன், மாவட்ட துணைச் செயலர் ஆர்.சின்னசாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
     ஆர்ப்பாட்டத்தில், தனியார் மற்றும் பன்னாட்டு ஆலைகளுக்கு ஆதரவான ரங்கராஜன் குழுப் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கக்கூடாது. கரும்பு பண நிலுவையை முழுவதும் வட்டியுடன் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும். கரும்புக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க வேண்டும்.
     நாடு முழுவதும் உள்ள கூட்டுறவு மற்றும் அரசு ஆலைகளை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் கூட்டுறவு ஆலைகளின் கடன் சுமை ரூ.2,500 கோடியை மாநில அரசு ஏற்க வேண்டும்.
     மத்திய அரசு, தமிழகக் கூட்டுறவு ஆலைகளை பாதுகாக்க ரூ.4 ஆயிரம் கோடி வழங்க வேண்டும். பாலக்கோடு ஆலையில் மின்சாரம் மற்றும் எத்தனால் உற்பத்தியை உடனே தொடங்க வேண்டும். லாரி வாடகை, வெட்டுக்கூலியை ஆலை நிர்வாகமே ஏற்றுக் கொள்ள வேண்டும். சர்க்கரை ஆலையில் தொழிலாளர்கள், ஊழியர்கள் விபத்தில் சிக்காமல் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai