சுடச்சுட

  

  தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்கக் கோரி ஆர்ப்பாட்டம்

  By தருமபுரி,  |   Published on : 04th January 2017 10:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தை வறட்சிப் பாதித்த மாநிலமாக அறிவிக்கக் கோரி, தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை நல்லம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   ஒன்றியத் தலைவர் எல்.சி.கிருஷ்ணன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் என்.பி.ராஜு முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலர் முருகேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
   ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தை வறட்சிப் பாதித்த மாநிலமாக அறிவித்து, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்.
   தலித், பழங்குடி மக்கள் நலனுக்கு ஒதுக்கும் நிதியை திருப்பி அனுப்பப்பட்டது குறித்து விசாரணை நடத்த வேண்டும். ஊரக வேலை உறுதித் திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள்கள் பணி வழங்கி, நிலுவையில் உள்ள ஊதியத்தை விரைந்து வழங்கிட வேண்டும். தனி நபர் இல்லக் கழிப்பறை திட்டத்தில் கழிப்பறை கட்டியவர்களுக்கான நிதி ரூ.12 ஆயிரத்தை உடனே வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai