Enable Javscript for better performance
அரூரில் கொசு மருந்து அடிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    அரூரில் கொசு மருந்து அடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
     அரூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன.
     இங்குள்ள கச்சேரிமேடு, மஜீத் தெரு, பரசுராமன் தெரு, கச்சேரிமேடு, திரு.வி.க. நகர், அம்பேத்கர் நகர், பழையப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் கழிவு நீர்க் கால்வாய்களில் அதிக அளவில் கழிவு நீர்த் தேங்கி நிற்கிறது.
     அதேபோல, வட்டாட்சியர் அலுவலக வளாகம், சார்பு நீதிமன்ற வளாகம், குற்றவியல் நடுவர் நீதிமன்ற வளாகம், பொதுப்பணித் துறை அலுவலர்கள் குடியிருப்பு, வருவாய் ஆய்வளர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் முள்புதர்கள் அடைந்து காணப்படுகிறது.
     இதனால் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகியுள்ளன. இந்த கொசுக்களால் நோய்கள் பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
     எனவே, அரூர் பேரூராட்சிக்கு உள்பட்ட நகரின் அனைத்துப் பகுதிகளிலும் கொசு மருந்து அடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai