சுடச்சுட

  

  கிராம பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணியிடம்: பதிவு சரிபார்க்க அழைப்பு

  By தருமபுரி,  |   Published on : 05th January 2017 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கிராம பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணியிடங்களுக்குப் பதிவு செய்த பதிவுதாரர்கள் தங்களது பதிவை சரிபார்க்குமாறு தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அழைப்பு விடுத்துள்ளார். இது குறித்து, அவர் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
   மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம பல்நோக்கு சுகாதாரப் பணியாளர் பணியிடங்களுக்கு ஒருங்கிணைந்த பட்டியல் வேலைவாய்ப்புத் துறையால் தயாரிக்கப்பட உள்ளது.
   இதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 2016, ஜூலை 1-அன்று 18 ஆகும். அதிகபட்ச வயது வரம்பு இல்லை. 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புத் தேர்ச்சியுடன் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் 18 மாத கால துணை செவிலியர்/ பல்நோக்கு சுகாதார தொழிலாளி கல்வித் தகுதியை முடித்து, தமிழ்நாடு செவிலியர் கவுன்சிலில் பதிவு செய்தவர்கள் இதற்கு தகுதியானவர்கள்.
   எனவே, இந்தத் தகுதியுடையவர்கள் அனைத்து சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டையுடன், தருமபுரி மாவட்ட அலுவலகத்தில் பதிவு செய்துள்ள முன்னுரிமையுள்ளவர்கள் மற்றும் முன்னுரிமையற்ற பதிவுதாரர்கள் வரும் 7-ஆம் தேதிக்குள் தங்களது பதிவை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai