சுடச்சுட

    

    தருமபுரியில் ஜன.7-இல் கேலோ விளையாட்டுப் போட்டி

    By தருமபுரி/ கிருஷ்ணகிரி,  |   Published on : 05th January 2017 09:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரியில் வருகிற 7-ஆம் தேதி கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெற உள்ளன.
     இது குறித்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
     தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், 2016-17-ஆம் ஆண்டிற்கான, தருமபுரி மாவட்ட அளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேர்வு போட்டிகள் வரும் 7,8 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. 14 மற்றும் 17 வயதுக்குள்பட்ட மாணவ, மாணவியருக்கு இரு பிரிவுகளாக தனித்தனியே மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற உள்ளது.
     முதல் நாள் 7-ஆம் தேதி, நீச்சல், கபாடி, பளு தூக்குதல், குத்துச் சண்டை, டேபிள் டென்னிஸ், தடகளம், டேக்வாண்டோ, கைப்பந்து, இறகுபந்து, டென்னிஸ் ஆகியவையும், 8-ஆம் தேதி மல்யுத்தம், கோ-கோ, வூசூ, ஹேண்ட் பால், ஹாக்கி, கால்பந்து, ஜிம்னாஸ்டிக், கூடைப்பந்து, வில் வித்தை, ஜீடோ, சைக்கிளிங் ஆகியவையும் மாவட்டத் தேர்வு போட்டிகளாக நடத்தப்படவுள்ளன.
     14 வயதிற்குள்பட்டவர்கள் 1.1.2003 அன்றோ அதற்குப் பின்னரோ பிறந்தவராக இருத்தல் வேண்டும். 17 வயதிற்குள்பட்டவர்கள் 1.1.2000 அன்றோ அதற்குப் பின்னரோ பிறந்தவராக இருத்தல் வேண்டும்.
     இப்போட்டியில் கலந்து கொள்பவர்கள், பிறப்பு சான்றிதழ் மற்றும் நற்சான்றிதழ் கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
     தனிநபர் போட்டிகளில் ஒருவர் ஒரு போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர். குழு போட்டிகளில் ஒரு பள்ளியிலிருந்து ஒவ்வொரு பிரிவிற்கும் ஒரு போட்டியில் ஒரு ஆண்கள் அணி மற்றும் ஒரு பெண்கள் அணி மட்டுமே கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர்.
     வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசு வங்கிக் கணக்கில் மட்டுமே செலுத்தப்படும். எனவே, தங்களது வங்கிக் கணக்கு புத்தகம், கணக்குப் புத்தகத்தின் நகல் கொண்டு வர வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் இடம் பெறுபவர்கள் மட்டும் மாநில போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவர் என்றார்.
     கிருஷ்ணகிரியில்... மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
     2016-17-ஆம் ஆண்டுக்கான கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் மற்றும் தேர்வுப் போட்டிகள், மாவட்ட விளையாட்டு அரங்கில் ஜனவரி 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறுகின்றன.
     6-ஆம் தேதி, நீச்சல், இறகுப் பந்து, வரிகோடு பந்து, மேசை பந்து, பளு தூக்குதல் ஆகிய போட்டிகளும், 7-ஆம் தேதி கபடி, குத்துச் சண்டை, தடகளம், டேக்வாண்டோ, கையூந்துப் பந்து (வாலிபால்) ஆகிய போட்டிகள் நடைபெறும்.
     மேலும் தேர்வுப் போட்டிகளான மல்யுத்தம், கோ-கோ, வூசூ, கைப்பந்து(ஹேண்ட் பால்), ஹாக்கி, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, வில்வித்தை, ஜூடோ, சைக்கிளிங் ஆகிய போட்டிகளும் 6-ஆம் தேதி நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai