நகைப் பறிப்பு வழக்கில் பெண் கைது
By அரூர், | Published on : 05th January 2017 09:09 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
இருளப்பட்டி கோயில் திருவிழாவின்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி மூதாட்டியிடம் நகை திருடிய பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
மூக்காரெட்டிப் பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அலமேலு (65). இவர், 2015, ஆகஸ்ட் 18இல் இருளப்பட்டி ஸ்ரீ காணியம்மன் கோயில் தேர்த் திருவிழாவுக்குச் சென்றபோது அங்கு கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி இவரது கழுத்தில் இருந்த 3 பவுன் நகையை மர்ம நபர் பறித்துச் சென்றார்.
இதுகுறித்து அ.பள்ளிப்பட்டி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்தனர். விசாரணையில், இந்த வழக்கில் திண்டுக்கல் மசூதி தெருவைச் சேர்ந்த முருகன் மனைவி அம்மு (25) என்பவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அம்முவை அ.பள்ளிப்பட்டி போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.