Enable Javscript for better performance
பேரேரியில் மலைவாழ் மக்கள் பொங்கல் விழா: அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    பேரேரியில் மலைவாழ் மக்கள் பொங்கல் விழா: அன்புமணி ராமதாஸ் பங்கேற்பு

    By அரூர்,  |   Published on : 05th January 2017 09:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சித்தேரி ஊராட்சி, பேரேரியில் மழைவாழ் மக்கள் மற்றும் பசுமை தாயகம் இணைந்து நடத்திய பொங்கல் விழாவை தருமபுரி மக்களவைத் தொகுதி உறுப்பினரும், பாமக இளைஞரணித் தலைவருமான அன்புமணி ராமதாஸ் தொடக்கி வைத்தார்.
     விழாவில் அவர் கூறியது:
     தருமபுரி மாவட்டம், சித்தேரி ஊராட்சியில் மலைவாழ் பழங்குடியின மக்கள் அதிகம் வசிக்கின்றனர். அரூர் நகரில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது சித்தேரி மலை கிராமங்கள். இந்த ஊராட்சியில் சூரியகடை, பேரேரி, பேரேரிபுதூர், மண்ணூர், மாங்கடை, அரசநத்தம், கலசப்பாடி, தோல்தூக்கி, வேளாம்பள்ளி உள்பட 60-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.
     இந்த மலை கிராமங்களில் பல இடங்களில் போதிய அளவில் பள்ளிகள், சாலைகள், மின்சாரம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை. கரடு, முரடான சித்தேரி மலைத் தொடரில் வசிக்கும் மக்கள் தங்கள் குடியிருப்புகளுக்கு சுமார் 1
     0 கிலோ மீட்டர் தொலைவு நடந்து செல்லும் நிலையே உள்ளது. மக்களுக்குச் தேவையான வசதிகளை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகளிடமிருந்து உரிய நிதிகளைப் பெற்றுச் செய்யப்படும் என்றார். அதைத் தொடர்ந்து, சித்தேரி மலைப்பகுதியில் வசிக்கும் மலைவாழ் பழங்குடியின இளைஞர்கள், மகளிரை ஊக்குவிக்கும் வகையில், பேரேரி கரிராமர் கோயில் வளாகத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
     தொடர்ந்து, பாரம்பரிய விளையாட்டுகளான வழுக்கு மரம் ஏறுதல், கயிறு இழுத்தல், கபடி, கைப்பந்து, கும்மிப் பாட்டு உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றன.
     விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற இளைஞர் மற்றும் மகளிர் குழுவினருக்கு அன்புமணி ராமதாஸ் பரிசுப் பொருள்களை வழங்கினார்.
     விழாவில் பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி, தமிழ்நாடு உழவர் பேரியக்கதின் மாநிலச் செயலாளர் இல.வேலுசாமி, மாநில துணைப் பொதுச் செயலர் சாந்தமூர்த்தி, மாநில துணைத் தலைவர்கள் ரா.அரசாங்கம், பாடிசெல்வம், தருமபுரி கிழக்கு மாவட்டச் செயலாளர் ஏ.வி.இமயவர்மன், நகரச் செயலர்கள் கே.ஐய்யப்பன், அ.சத்தியமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai