சுடச்சுட

    

    மத்திய அரசின் பண மதிப்பு இழக்க நடவடிக்கையைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     தருமபுரி தொலைத்தொடர்பு அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அக்கட்சியின் மாவட்டத் தலைவர் ராஜாராம் வர்மா தலைமை வகித்தார். காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர்கள் நரேந்திரபாபு, கோபிநாத் ஆகியோர் பேசினர்.
     இதில், மத்திய அரசின் ரூ.500, ரூ.1,000 மதிப்புள்ள நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் ஏழை, எளிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும், உடனடியாக பணப் புழக்கத்தை அதிகரிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
     இதில், மாவட்ட முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன், ஐஎன்டியுசி முன்னாள் தலைவர் நாகராஜ், நகரத் தலைவர் செந்தில்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    கிருஷ்ணகிரியில்...  புறநகர் பேருந்து நிலையம் அருகே உள்ள அண்ணா சிலை எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அந்தக் கட்சியின் மாவட்டத் தலைவர் ஜேசு.துரைராஜ் தலைமை வகித்தார். கர்நாடக எம்.எல்.சி.யுமான மோட்டம்மா, முன்னாள் எம்.எல்.ஏ. கோபிநாத், முன்னாள் எம்.பி. ராமதாஸ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் மாவட்டத் தலைவர்கள் அக.கிருஷ்ணமூர்த்தி, நாராயணமூர்த்தி, எஸ்.சி, எஸ்.டி. பிரிவு தலைவர் ஆறுமுக சுப்பிரமணி, நகரத் தலைவர் தளபதி ரகமத்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai