சுடச்சுட

    

    பாப்பிரெட்டிப்பட்டி
    பாப்பிரெட்டிப்பட்டி, காளிப்பேட்டை, அ.புதுப்பட்டி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்வதால், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜன.6) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக செயற்பொறியாளர் (அரூர்) கே.சண்முகம் தெரிவித்துள்ளார்.
    மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: பாப்பிரெட்டிப்பட்டி, வெங்கடசமுத்திரம், மெணசி, சாமியாபுரம் கூட்டுச் சாலை, காளிப்பேட்டை, மஞ்சவாடி, புதுப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி, பாப்பம்பாடி, எருமியாம்பட்டி, கவுண்டம்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி.

    ஜனவரி 7 மின் நிறுத்தம்
    ஒசூர்
     ஒசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் சனிக்கிழமை மின் நிறுத்தம் செய்யப்படும் என ஒசூர் மின்வாரிய செயற்பொறியாளர் குமார் தெரிவித்துள்ளார்.
     ஒசூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் சனிக்கிழமை மின் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பாகலூர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாகலூர் பகுதிகளிலும், ஒசூர் மின் நகர் துணை மின் நிலையத்துக்குள்பட்ட ஒசூர் சானசந்திரம், ஒன்னல்வாடி பகுதிகளிலும், சூசூவாடி துணை மின் நிலையத்துக்குள்பட்ட சூசூவாடி, மூக்கண்டபள்ளி, பாரதி நகர், எம்.ஜி.ஆர். நகர், காமராஜ் நகர், எழில் நகர், ராஜேஸ்வரி லே அவுட் பகுதிகளிலும், நாரிகானப்புரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட நாரிகானப்புரம், பேரிகை, அத்திமுகம்  பகுதிகளிலும், உத்தனப்பள்ளி மற்றும் கெம்பட்டி துணை மின் நிலையத்துக்குள்பட்ட உத்தனப்பள்ளி, பீர்ஜேப்பள்ளி, வரகானப்பள்ளி, கெலமங்கலம், அக்கொண்டப்பள்ளி, டி.கொத்தூர், பைரமங்கலம், தேன்கனிக்கோட்டை பகுதிகளிலும். ஒசூர் டி.வி.எஸ். நகர், அந்திவாடி பகுதிகளிலும் மின் நிறுத்தும் செய்யப்படும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai