சுடச்சுட

  

  ஜன.8-இல் பரவாசுதேவ சுவாமி கோயிலில் பரமபத வாசல் திறப்பு

  By DIN  |   Published on : 06th January 2017 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி கோட்டை பரவாசுதேவ சுவாமி கோயிலில், வரும் 8-ஆம் தேதி பரமபத வாசல் திறப்பு நடைபெற உள்ளது.
   தருமபுரி நகரில் கோட்டைப் பகுதியில் வரலாற்றுச் சிறப்பு மிக்க வரமகாலட்சுமி உடனாகிய பரவாசுதேவ சுவாமி கோயில் உள்ளது. 108-ஆவது வைணவத் திருத்தலம் என போற்றப்படும், இக்கோயிலில், மகாலட்சுமியை மடிமேல் அமர்த்தி சதுர்புஜங்களில் சங்கு, சக்கரம், கதாயுதம் ஏந்தி கருடன், ஹனுமருடன் ஒரே பிம்பத்தில் ஸ்ரீ பரவாசுதேவ பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.
   இக் கோயிலில், வைகுண்ட ஏகாதசியையொட்டி வரும் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர் 4.30 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட உள்ளது. இப் பரமபத வாசல் வழியாக ஸ்ரீதேவி, பூதேவியரோடு பரவாசுதேவ சுவாமி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார்.
   இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க தருமபுரியில் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வருவர். இதையொட்டி, இந்து சமய அறநிலையத் துறை சார்பில், வைகுண்ட ஏகாதசி பெருவிழா ஏற்பாடு மேற்கொள்ளப்படுகிறது.
   மேலும், இவ்விழாவில் பங்கேற்க வருகை தரும் பக்தர்களுக்கு வழங்க லட்டு பிரசார கமிட்டி சார்பில் சுமார் ஒரு லட்சம் லட்டுகள் தற்போது தயாரிக்கும் பணி ஆலய வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதுதவிர, ஸ்ரீவாரி சேவ டிரஸ்ட் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட உள்ளது.
   இதேபோல, தருமபுரி கடைவீதியில் உள்ள ஸ்ரீ பிரசன்ன வெங்கடரமண சுவாமி திருக்கோயில், குமாரசாமிபேட்டை சென்னகேசவ பெருமாள் திருக்கோயில், பழைய தருமபுரி வரகுப்பம் வெங்கடரமண சுவாமி, செட்டிக்கரை மற்றும் அதியமான்கோட்டையில் உள்ள சென்றாயப் பெருமாள் திருக்கோயில், ஆட்டுக்காரம்பட்டி ராதேகிருஷ்ணா பிருந்தாவனம், அதகப்பாடி லட்சுமி நாரயண சுவாமி திருக்கோயில் உள்ளிட்ட வைணவத் திருத்தலங்களில் அன்றைய தினம் அதிகாலை 4.30 மணிக்கு பரதபத வாசல் திறப்பு நடைபெற உள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai