சுடச்சுட

  

  ஜெயலலிதா 30-ஆவது நாள் நினைவு தினம்: அதிமுகவினர் அமைதிப் பேரணி, மெளன அஞ்சலி

  By DIN  |   Published on : 06th January 2017 03:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஜெயலலிதாவின் 30-ஆவது நாள் நினைவு நாளையொட்டி, வியாழக்கிழமை பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் அமைதிப் பேரணி, மெளன அஞ்சலி மற்றும் ஊர்வலம் நடத்தினர்.
   தருமபுரியில் திருப்பத்தூர் சாலையில் உள்ள பெரியார் சிலையருகே மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தலைமையில் அக்கட்சியினர் பேரணியாக சென்றனர். இப்பேரணி கடைவீதி, சத்திரம் மேல்தெரு, நகராட்சி அலுவலகம், கந்தசாமி வாத்தியார் தெரு, நேதாஜி புறவழிச் சாலை வழியாக அதிமுக மாவட்ட கட்சி அலுவலகம் வந்தடைந்தது.
   இதைத் தொடர்ந்து, அங்கு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப் படத்துக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். அவரைத் தொடர்ந்து, சட்டப்பேரவை உறுப்பினர்கள் பி.பழனியப்பன் (பாப்பிரெட்டிப்பட்டி), ஆர்.ஆர்.முருகன் (அரூர்), முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சிங்காரம், மாதப்பன், குப்புசாமி, அப்புனு, நகர்மன்ற முன்னாள் தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலர் டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
  கிருஷ்ணகிரியில்...  கிருஷ்ணகிரி மாவட்டச் செயலர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டி, முன்னாள் அமைச்சர் முனுசாமி, அசோக்குமார் எம்.பி, எம்.எல்.ஏ-க்கள் மனோரஞ்சிதம் நாகராஜ், சி.வி.ராஜேந்திரன், ஒன்றியச் செயலர்கள் சோக்காடி ராஜன், ஜெயபால், முனியப்பன், நகரச் செயலர்கள் கேசவன், நாராயணன், முன்னாள் எம்.எல்.ஏ. முனிவெங்கட்டப்பன், நகர்மன்ற முன்னாள் தலைவர் தங்கமுத்து, சி.பெருமாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
   கிருஷ்ணகிரி மாவட்ட அதிமுக அலுவலகம் அருகில் தொடங்கிய ஊர்வலம், முக்கியச் சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் வட்டச் சாலை அருகே நிறைவடைந்தது. முன்னதாக ஜெயலலிதா உருவப் படத்துக்கு படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
  ஊத்தங்கரையில்... நான்குமுனை சந்திப்பில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகில் ஒன்றிய நகர கிளைக் கழகம் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
   நிகழ்ச்சிக்கு அதிமுக ஒன்றிய செயலர் எ.சி.தேவேந்திரன் தலைமை வகித்தார். மாநில நில வளவங்கி தலைவர் சாகுல்அமீது, நகரச் செயலர் சிவானந்தம், முன்னாள் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திருஞானம், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் கிருஷ்ணன், துணைத் தலைவர் சுப்பிரமணி, ஒன்றிய விவசாய அணி செயலர் வேங்கன், மாவட்ட டாஸ்மாக் அண்ணா தொழிற்சங்க செயலர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai