சுடச்சுட

    

    திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகளில் வென்றோருக்கு பாராட்டு

    By DIN  |   Published on : 06th January 2017 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருப்பாவை, திருவெம்பாவை போட்டிகளில் வென்றோருக்கு புதன்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
     தருமபுரி மாவட்ட இந்து அறநிலையத் துறை சார்பில், மாவட்ட அளவிலான திருப்பாவை, திருவெம்பாவை ஒப்பித்தல் மற்றும் கட்டுரைப் போட்டிகளில் ராஜாதோப்பு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர்.
     மாணவர்கள் கே.தமிழரசன், எஸ்.சிபிலா, எஸ்.பரமேஷ், எஸ்.ராதா, கே.சசிகலா, வி.ஐஸ்வர்யா ஆகியோர் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களையும் பிடித்தனர். இவர்களுக்கு புதன்கிழமை நடைபெற்ற பாவை விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டன.
     உதவி தொடக்கக் கல்வி அலுவலர் டி.நடராஜன், கூடுதல் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் லூ.மேரி சகாய ராணி ஆகியோர் மாணவர்களையும், பயிற்றுவித்த ஆசிரியைகள் என்.தமிழ்ச்செல்வி, ஜி.விமலா ஆகியோரையும் பாராட்டினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai