சுடச்சுட

  

  பட்டியல் வெளியீடு: தருமபுரி மாவட்டத்தில் 11,84,011 வாக்காளர்கள்

  By DIN  |   Published on : 06th January 2017 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரியில் வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை வெளியிடப்பட்டது. அதில், மாவட்டத்தில் மொத்தம் 11,84,011 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
   தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில்,  இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கே.விவேகானந்தன் வியாழக்கிழமை வெளியிட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பேசியது: கடந்த 2016 செப்.1-ஆம் தேதி வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலை அடிப்படையாகக் கொண்டு, 1.1.2017-ஆம் தேதி அன்று 18 வயது நிரம்பியவர்கள் மற்றும் விடுபட்டவர்கள் பெயர்களை பட்டியலில் சேர்க்கும் பணி 2016 செப்.1-ஆம் தேதி முதல் செப்.30-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில், உயிரிழந்தவர்களின் பெயர் மற்றும் இருமுறை பதிவு செய்தவர்களில் ஒரு பதிவு பெயர் நீக்கம் செய்தும், ஏற்கெனவே, உள்ள பதிவுகளில் திருத்தம் செய்யும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.
   இப் பணியைத் தொடர்ந்து, தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், பாப்பிரெட்டிப்பட்டி மற்றும் அரூர் (தனி) ஆகிய ஐந்து தொகுதிகளில் மொத்தம் 11,84,011 வாக்காளர் உள்ளனர். மேலும், இந்த இறுதி வாக்காளர் பட்டியல் அனைத்து வாக்குச் சாவடி மையம், வட்டாட்சியர், கோட்டாட்சியர் அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்படும். அதில், தங்களது பதிவினை வாக்காளர்கள் சரிபார்த்துக் கொள்ளலாம். புதிய வாக்காளர்களுக்கு வரும் ஜன.25-ஆம் தேதி வாக்காளர் அட்டை வழங்கப்படும் என்றார்.
   இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், கோட்டாட்சியர் ராமமூர்த்தி மற்றும் அதிமுக சார்பில் வழக்குரைஞர் அசோக்குமார், திமுக துணைச் செயலர் சுப்பிரமணி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் செயற்குழு உறுப்பினர் ஜோதிபாசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
  தொகுதி வாரியாக வாக்காளர்கள்: பாலக்கோடு: ஆண்கள்-1,11,696, பெண்கள்-1,06,756, இதரர்-11, மொத்தம்- 2,18,463. பென்னாகரம்: ஆண்கள்-1,20,309, பெண்கள்-11,197, இதரர்-12, மொத்தம்-2,32,292. தருமபுரி: ஆண்கள்-1,29,204, பெண்கள்-1,26,069, இதரர்-94, மொத்தம்-2,55,367, பாப்பிரெட்டிப்பட்டி: ஆண்கள்-1,25,129, பெண்கள்-1,22,929, இதரர்-7, மொத்தம்-2,48,065. அரூர் (தனி): ஆண்கள்-1,16,425, பெண்கள்-1,13,389, இதரர்-10, மொத்தம்-2,29,824.
   கடந்த செப்டம்பர் 1-ஆம் தேதி வெளியிட்ட பட்டியலில் ஐந்து தொகுதிகளிலும் இருந்த மொத்த வாக்காளர்கள் 11,60,195. சிறப்பு சுருக்க திருத்த காலத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஆண்கள்-11,122, பெண்கள்-12,666, இதரர்-28, மொத்தம் 23,816. அதேபோல, நீக்கம் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,588 ஆகும்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai