சுடச்சுட

    

    அரூரில் மணல் கடத்தியதாக 2 லாரிகளை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை பறிமுதல் செய்தனர்.
     சேலம்-திருப்பத்தூர் நெடுஞ்சாலை வழியாக அரசு அனுமதியின்றி லாரிகளில் மணல் எடுத்துச் செல்வதாக வருவாய்த் துறையினருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அரூர் வட்டாட்சியர் செல்வராஜ் தலைமையிலான வருவாய்த் துறையினர் சேலம் நெடுஞ்சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.
     அப்போது, அந்த வழியாக வந்த லாரிகளை சோதனை செய்ததில் உரிய அனுமதி இல்லாமல் மணல் எடுத்துச் செல்வது தெரியவந்தது.
     இதையடுத்து, உரிமம் இல்லாமல் மணல் எடுத்துச் சென்ற 2 லாரிகளை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து லாரி ஓட்டுநர்கள் வரதன் மகன் பன்னீர்செல்வம் (45), ராமசாமி மகன் பாபு (34) ஆகியோரிடம் வருவாய்த் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai