சுடச்சுட

    

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     தருமபுரி தொலைத்தொடர்பு அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தருமபுரி ஒன்றியச் செயலர் என்.கந்தசாமி தலைமை வகித்தார். மாநிலக்குழு உறுப்பினர் எம்.மாரிமுத்து, மாவட்டச் செயலர் ஏ.குமார், நகரச் செயலர் ஜி.லெனின் ஆகியோர் பேசினர்.
     இதில், பள்ளிக்கரணையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மீது தாக்குதல் நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
     ஒன்றியச் செயலர்கள் குப்புசாமி (நல்லம்பள்ளி), ராமன் (பாலக்கோடு), பாப்பாரப்பட்டி பகுதிச் செயலர் வி.விஸ்வநாதன் உள்ளிட்ட திரளான நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
    அரூரில்... அரூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் வட்டச் செயலர் ஆர்.நடராஜன் தலைமை வகித்தார்.
     இதில், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலர் எம்.முத்து, பாப்பிரெட்டிப்பட்டி வட்டச் செயலர் வஞ்சி, மாதர் சங்க மாவட்டத் தலைவர் ஆர்.மல்லிகா, வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் சி.வேலாயுதம், மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் எஸ்.பி.சின்னராசு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai