சுடச்சுட

  

  ஒகேனக்கல் குடிநீர் வழங்க திம்மம்பட்டி மக்கள் கோரிக்கை

  By DIN  |   Published on : 08th January 2017 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என திம்மம்பட்டி, மாங்கரை புதுஏரி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  பாலக்கோடு வட்டம், ஜர்த்தலாவ் ஊராட்சிக்குள்பட்டது திம்மம்பட்டி கிராமம். இங்கு ஐம்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்தக் கிராமத்தில் ஊராட்சி நிர்வாகம் சார்பில், ஆழ்துளைக் கிணறு அமைத்து, தரைமட்ட நீர்த்தேக்கத் தொட்டி மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
  இந்த நிலையில், அண்மையில் ஆழ்துளைக் கிணறு பழுதடைந்து குடிநீர் விநியோகம் தடைபட்டதாகக் தெரிகிறது. மேலும், ஒகேனக்கல் குடிநீர் இந்தக் கிராமத்துக்கு வருவதில்லை.
  இதனால், குடிநீருக்காக, சுமார் ஒரு கிலோமீட்டர் சென்று அருகாமையிலுள்ள கிராமங்களில் குடிநீர் எடுத்துவரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், ஒகேனக்கல் குடிநீரை இப் பகுதியில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
  இதேபோல, பென்னாகரம் அருகே மாங்கரை அடுத்துள்ள புதுஏரி பகுதியில் சுமார் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறு அண்மையில் பழுதடைந்துள்ளது. இதனால், தங்களின் அன்றாட தேவைகளுக்கு, சுமார் 2 கி.மீ நடந்துச் சென்று அருகாமையிலுள்ள மாங்கரை கிராமத்திலிருந்து அப்பகுதியினர் தண்ணீர் எடுத்து வருகின்றனர்.
  இதுதொடர்பாக, ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம். எனவே, கிராம மக்களின் நலன் கருதி, விரைந்து குடிநீர் வழங்கிடவும், அதேபோல, சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள ஒகேனக்கல் பிரதான குழாயிலிருந்து புதுஏரி பகுதிக்கு இணைப்பு வழங்கி ஒகேனக்கல் குடிநீர் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai