Enable Javscript for better performance
ஓவியப் போட்டியில் முதலிடம் மாணவருக்குப் பாராட்டு- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி வட்டம், சந்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 8-ஆம் வகுப்பு மாணவர் எஸ். சின்ராசு, பர்கூர் வட்டார வள மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஓவியப் போட்டியில் முதலிடம் பெற்றுள்ளார்.
    பெண் கல்வி, இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வுக்காக நடத்தப்பட்ட இப்போட்டியில் கழிவறை பயன்பாடு குறித்த தலைப்பில் ஓவியம் வரைந்தார் சின்ராசு.
    போட்டியில் 73 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 146 மாணவ, மாணவிகள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவரை பள்ளித் தலைமை ஆசிரியை ந. பத்மாவதி, உதவித் தலைமை ஆசிரியர் மா. செஞ்சி, கலை ஆசிரியர் தொ.மா. சோமசுந்தரம் உள்ளிட்டோர் பாராட்டினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai