சுடச்சுட

  

  கேலோ விளையாட்டுப் போட்டிகள் தருமபுரியில் சனிக்கிழமை தொடங்கியது.
  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் போட்டிகளைத் தொடக்கிவைத்து ஆட்சியர் கே.விவேகானந்தன் பேசியது:
  "விளையாடு இந்தியா' எனும் கேலோ விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. 14 மற்றும் 17 வயதுக்குள்பட்டவர்களுக்கு தடகளம் மற்றும் குழுப் போட்டிகள் என 21 வகையான போட்டிகளை இதில் நடத்தப்படுகிறது. இப் போட்டிகளில் சிறப்பிடம் பெறுவோருக்கு ரொக்கப் பரிசுகள் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. மேலும், முதலிடம் பெறுவோர் மாநிலப் போட்டிகளுக்குத் தகுதி பெறுவர்.
  எனவே, இதுபோன்ற விளையாட்டுப் போட்டிகளில் மாணவ, மாணவியர் பங்கேற்று தங்களை சிறந்த வீரர்களாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
  இரண்டு நாள்கள் நடைபெறும் இப்போட்டியில், ஜன.7-இல் நீச்சல், கபடி, பளு தூக்குதல், குத்துச் சண்டை, டேபிள் டென்னிஸ், தடகளம், டேக்வாண்டோ, வாலிபால், இறகுப்பந்து மற்றும் டென்னிஸ் ஆகிய போட்டிகள் நடைபெறுகின்றன.
  மேலும் ஞாயிற்றுக்கிழமை தேர்வு போட்டிகளாக மல்யுத்தம், கோ-கோ, வூசூ, கைப்பந்து, ஹாக்கி, கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், கூடைப்பந்து, வில்வித்தை, ஜூடோ ஆகிய போட்டிகளும் நடைபெறுகின்றன.
  மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், மாவட்ட விளையாட்டு அலுவலர் ந.நஞ்சப்பன், இறகுப்பந்து பயிற்றுநர் கே.சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai