சுடச்சுட

    

    சித்தேரி சாலையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுகோள்

    By DIN  |   Published on : 08th January 2017 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மலைப்பகுதியான சித்தேரி சாலையில் தடுப்புச் சுவர் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
    வள்ளிமதுரை-சித்தேரி செல்லும் தார்ச் சாலையானது 12 கிலோ மீட்டர் தொலைவு கொண்டது. இந்தச் சாலை முழுவதும் மலைப் பகுதியில் அமைந்துள்ளது. மிகவும் குறுகலான நிலையில் உள்ள இந்த தார்ச் சாலையானது ஒருவழிப் பாதையாகும்.
    அதிக வளைவுகளும், மேடு பள்ளங்கள் நிறைந்த சாலையாக சித்தேரி சாலை உள்ளது. சாலையில் பல இடங்களில் சாலையோர தடுப்புச் சுவர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் மலைப் பகுதியில் எதிர், எதிரே வாகனங்கள் வரும்போது பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாக நேரிடுகிறது.
    மலைப்பகுதியில் சாலையோரத்தில் போதிய அளவில் தடுப்புச் சுவர்கள் இல்லாமல் இருப்பதால் மலைப் பகுதியில் வாகனங்கள் கவிழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன.
    எனவே, சித்தேரி மலைத்தொடரில் உள்ள சாலையோர பள்ளங்கள், வளைவுகளைக் கணக்கெடுத்துப் பாதுகாப்பான வகையில் தடுப்புச் சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.


    திறனாய்வுத் தேர்வு சிறப்புப் பயிற்சி முகாம்
    ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தேசியத் திறனாய்வுத் தேர்வுக்கான சிறப்புப் பயிற்சி முகாம் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
    நிகழ்ச்சிக்கு ஊத்தங்கரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மு.விஜயராஜ் தலைமை வகித்தார். கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் த.மகேஸ்வரி வரவேற்றார். தலைமை ஆசிரியர்கள் அருந்ததியர் காலனி-செ.வெங்கடேசன், ஊ.ரெட்டிப்பட்டி- மா.கிருஷ்ணமூர்த்தி, ஒட்டம்பட்டி-கி.ஞானசேகரன், ஒன்றிய வளமைய (பொ) மேற்பார்வையாளர் கா. நேரு ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
    ஜோதிநகர் தலைமை ஆசிரியர் செ. ராஜேந்திரன் பயிற்சி முகாமின் நோக்கம் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை விளக்கிக் கூறினார். ஆசிரியர் பயிற்றுநர்களாக இரா.சசிக்குமார், ஸ்ரீதர், விஜயன்,கலைச்செல்வன், அருண்குமார் ஆகியோரும், பயிற்சி ஒருங்கிணைப்பாளராக ஜோதிநகர் தலைமை ஆசிரியர் செ.ராஜேந்திரன் செயல்படுவர்.
    சிறப்பு விருந்தினராக அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சீனி.திருமால் முருகன் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். முகாமில் ஊத்தங்கரை ஒன்றியத்தைச் சார்ந்த 18 பள்ளிகளில் இருந்து 130 மாணவர்கள், அந்தப் பள்ளி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஊத்தங்கரை தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியர் கே.முருகன் நன்றி கூறினார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai