பாவக்கல் ஊராட்சியில் என்எஸ்எஸ் முகாம்
By DIN | Published on : 08th January 2017 05:29 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் பாவக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு ஸ்ரீவித்யா மந்திர் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் வே.சந்திரசேகரன் தலைமை வகித்தார்.கல்லூரி முதல்வர் முனைவர் க.அருள், செயலர் கு.செங்கோடன், ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வேடியப்பன்,கிராம வளர்ச்சி இராஜா ஆகியோர் முன்னிலை வகித்து சிறப்புரையாற்றினர்.
முகாமில் பாவக்கல், நல்லவம்பட்டி,கரியபெருமாள்வலசை,காந்திநகர் உள்ளிட்ட கிராமங்களை தூய்மைப் படுத்தும் பணியும், மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு, பொதுசுகாதாரம் குறித்து பொதுமக்களுக்கு என்எஸ்எஸ் மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சேலம் பெரியார் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் எஸ்.நந்தகுமார் முகாமை தொடக்கிவைத்தார். பாவக்கல் பள்ளி தலைமை ஆசிரியை ஜான்சிராணி, ஒப்பந்ததாரர் வேங்கன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக, திட்ட அலுவலர் திருமுருகன் வரவேற்றார்.இறுதியாக திட்ட அலுவலர் ஆர்.லிசி நன்றி கூறினார்.