சுடச்சுட

    

    மின் வாரியத்தில் 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்த வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 08th January 2017 05:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை மின் வாரியத்தில் அமல்படுத்த வேண்டும் என மின் வாரிய ஓய்வூதியர்கள் வலியுறுத்தினர்.
    தமிழ்நாடு மின் வாரிய ஓய்வூதியர் சங்கங்களின் சம்மேளன வேலூர் மண்டல மாநாடு, தருமபுரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
    ஓய்வூதியர் சம்மேளனத் தலைவர் வி.ஸ்ரீதரன் தலைமை வகித்தார். இணைச் செயலர் என்.ரங்கசாமி வரவேற்றார். பொதுச் செயலர் வி.ஜெகநாதன், பொருளாளர் எஸ்.பன்னீர் செல்வம், அமைப்புச் செயலர் எஸ்.ஏ,சுந்தரராஜன், கிருஷ்ணகிரி மாவட்டச் செயலர் டி.சந்திரசேகரன், வேலூர் மாவட்டச் செயலர் எச்.சுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை மாநில அரசிலும், மின் வாரியத்திலும் கடந்த 2016 ஜனவரி முதல் தேதியிலிருந்து அமல்படுத்த வேண்டும். மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை ஓய்வூதியர்களுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
    மருத்துவப்படியாக ரூ.500 வழங்க வேண்டும். 50 சத அகவிலைப்படியை அரசுப் பணியாளர்களுக்கு இணையாக வழங்க வேண்டும். மறைந்த ராணுவத்தினர் துணைவியர்களுக்கு இரு குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
    மின் வாரிய ஓய்வூதியர்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கிய தமிழக அரசுக்கு மாநாட்டில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இதேபோல, மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai