சுடச்சுட

  

  வறட்சிப் பாதிப்பை முழுமையாக ஆய்வு செய்ய வலியுறுத்தல்

  By DIN  |   Published on : 08th January 2017 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தருமபுரி மாவட்டத்தில், வறட்சிப் பாதிப்பை முழுமையாக ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க வேண்டும் என அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியது.
  இதுகுறித்து அந்தச் சங்கத்தின் மாவட்டச் செயலர் எம்.முத்து தலைமையில் நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை அளித்த மனு:
  தருமபுரி மாவட்டத்தில், பருவமழை பெய்யாததால் தொடர்ந்து வறட்சி நிலவி வருகிறது. விவசாயிகள் நடவு செய்த பயிர்கள் அனைத்தும் காய்ந்து விட்டன. கல்நடைகள் தீவனமின்றி தவித்து வருகின்றன. இதன் காரணமாக, தருமபுரி மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
  மேலும், கடந்த டிசம்பர் 28-ஆம் தேதி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பிலும் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த நிலையில், ஜன.5-ஆம் தேதி வறட்சி பாதிப்பை ஆய்வு செய்ய அமைச்சர் மற்றும் அதிகாரிகள் கொண்ட குழு வந்தது.
  ஆனால், இதுதொடர்பாக விவசாயிகளுக்கும், விசாயிகள் சங்கப் பிரதிநிதிகளுக்கும் தகவல் அளிக்கப்படவில்லை. மேலும், சில குறிப்பிட்ட இடங்களை மட்டுமே ஆய்வு செய்ததாக தெரிகிறது.
  எனவே, மாவட்டத்தில் வறட்சி பாதிப்பை முழுமையாக ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும். மேலும், வங்கிகளில் அவர்கள் பெற்ற அனைத்து கடன்களையும் தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல, மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட பாலுக்கான நிலுவைத் தொகையை விரைந்து வழங்கிட வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  கருத்து கேட்க வேண்டும்
  தருமபுரி மாவட்டத்தில் வறட்சி பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய வரும் அதிகாரிகள், விவசாயிகள் சங்க தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் கருத்துக் கேட்க வேண்டும் தமிழ்மாநில விவசாயத் தொழிலாளர் சங்க தருமபுரி மாவட்டச் செயலர் ஜெ.பிரதாபன் வலியுறுத்தியுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai