சுடச்சுட

    

    தருமபுரி மாவட்டம், பூமாண்டஅள்ளி மற்றும் கடத்தூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கும் 142 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக் கணினிகளை மாநில உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் அண்மையில் வழங்கினார்.
    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். மாநில சுகாதாரத் துறை முதன்மைச் செயலரும், மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
    நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அன்பழகன், தருமபுரி மாவட்டத்தில் பள்ளிக் கல்விக்குப் பிறகு கல்லூரிக்குச் செல்லாமல் நிற்கும் 10 சதவிகிதம் பேரை சந்தித்து கல்லூரிகளில் சேர்க்கும் பணிக்காக ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
    பாலிடெக்னிக் கல்லூரிகளின் முதல்வர்கள் கா. மகாலிங்கம், அ. செளந்தரராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
    வட்டாட்சியர் அலுவலகங்களில் பிப். 28-ஆம் தேதி வரை ஆதார் பதிவு தருமபுரி, ஜன. 7: தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஆதார் மையங்கள் வரும் பிப். 28ஆம் தேதி வரை செயல்படும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.
    இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் ஆதார் சேர்க்கை மையங்கள் செயல்படுகின்றன. இங்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் ஆதார் பதிவு செய்யலாம். ஒருமுறை ஆதார் பதிவு செய்தால் போதும். மீண்டும் மீண்டும் வரத் தேவையில்லை.
    ஏற்கெனவே பதிவு செய்து எண்ணும், அட்டையும் கிடைக்காதவர்கள் இந்த மையங்களில் நேரில் சென்று பெயர், பிறந்த தேதி, அஞ்சல் குறியீட்டு எண் மற்றும் விரல் ரேகை, கருவிழிகளைப் பதிவு செய்து ஆதார் எண்ணைத் தெரிந்து கொள்ளலாம்.
    இந்த ஆதார் எண்ணை பொது இ-சேவை மையங்களில் காட்டி விரல் ரேகை மற்றும் கருவிழியைப் பதிவு செய்து ரூ. 30 மட்டும் கட்டணம் செலுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை அல்லது ரூ. 10 செலுத்தி காகிதத்தில் அச்சாகப் பெற்றுக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai