சுடச்சுட

  

  காய்ந்த கரும்புகளுக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை

  By அரூர்,  |   Published on : 09th January 2017 09:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காய்ந்த கரும்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையின் அனைத்து கரும்பு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
   இதுகுறித்து அந்தக் கூட்டமைப்பின் துணைத் தலைவர் அண்ணாதுரை, செயலாளர் ராஜசேகர் ஆகியோர் கூறியது:
   அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் காய்ந்து போன கரும்புகள் முன்னுரிமை அடிப்படையில் வெட்டப்பட்டு பாலக்கோடு, திருப்பத்தூர், கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்பட்டுள்ளது.
   கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு அரைவைப் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, தருமபுரி மாவட்டத்தில் வறட்சியால் பாதிக்கப்பட்ட பயிர்கள் குறித்து வேளாண் மற்றும் வருவாய்த் துறையினர் கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். இந்த கணக்கெடுப்பு பணியானது பெயரளவில் மட்டுமே நடைபெறுகிறது.
   இதேபோல, வறட்சியின் காரணமாக தற்போதுள்ள கரும்புகளும் காய்ந்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, காய்ந்து போன கரும்புகள் குறித்து விரிவான கள ஆய்வு செய்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கரும்பு விவசாயிகள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai