சுடச்சுட

    

    ஊதிய உயர்வு வழங்க துப்புரவுப் பணியாளர்கள் கோரிக்கை

    By தருமபுரி,  |   Published on : 10th January 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஊதிய உயர்வு வழங்கக் கோரி, துப்புரவுப் பணியாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
     அவர்கள் அளித்த மனு விவரம்: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியத்தில் 450 பழைய பணியாளர்கள் மற்றும் 150 புதிய பணியாளர்கள் என மொத்தம் 600 துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றோம்.
     பணி அனுபவத்துக்கேற்ப எங்களுக்கு, 7-ஆவது ஊதியக் குழுப் பரிந்துரையின்படி ஊதிய உயர்வு அளித்திருக்க வேண்டும். ஆனால், இதுவரை வழங்கப்படவில்லை, எனவே, ஊதிய உயர்வை உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும், துப்புரவுப் பணியாளர்களுக்கு பயனளிக்கும் வகையில் பழைய ஓய்வூதிய முறையைப் பின்பற்ற வேண்டும்.
     வறட்சி நிவாரணம்: தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் விளைவித்த பயிர்கள் அனைத்தும், பருவ மழையின்றி கருகிப் போனது. இதனால் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளோம். எனவே, தருமபுரி மாவட்ட விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி ஆட்சியர் கே.விவேகானந்தனிடம் மனு அளித்தனர்.
     நடவடிக்கை கோரி மனு: தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் வட்டத்துக்குள்பட்ட மாதேஅள்ளி கிராம நிர்வாக அலுவலர் மற்றும் உதவியாளர் ஆகியோர், தங்களிடம் பல்வேறு சான்றிதழ்கள் பெற வருவோர் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகளுக்காக சான்றிதழ் கோரி வருவோரை அலைக்கழிப்பதோடு, அரசுப் பணியை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். எனவே, இவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் ஜனநாயக இளைஞர் கழக நிர்வாகி பெரியண்ணன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai