சுடச்சுட

  

  மத்திய அரசின் உயர் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு எதிராக, ஏஐடியூசி தொழிற்சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   தருமபுரி தொலைத் தொடர்பு அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் எம்.மாதேஸ்வரன் தலைமை வகித்தார். மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர்.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எஸ்.தேவராஜன், துணைச் செயலர்கள் ஜெ.பிரதாபன், கா.சி.தமிழ்க்குமரன், ஏஐடியூசி மாவட்டச் செயலர் கே.மணி ஆகியோர் பேசினர்.
   ஆர்ப்பாட்டத்தில், வங்கி மற்றும் ஏடிஎம் மையங்களில் பணப் பரிவர்த்தனையை தாராளமாக்க வேண்டும். பொதுமக்களின் சிரமத்தை போக்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மத்திய அரசின் உயர் மதிப்புடைய பணத்தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கையை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
   
   
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai