சுடச்சுட

    

    தருமபுரி, அரூரில் மகளிர் காங்கிரஸார் ஆர்ப்பாட்டம்

    By தருமபுரி/அரூர்,  |   Published on : 10th January 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மத்திய அரசின் உயர் மதிப்புள்ள பணத்தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்து, தருமபுரியில் மகளிர் காங்கிரஸ் சார்பில், திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     தருமபுரி தொலைத் தொடர்பு அலுவலகம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் காவேரியம்மாள் தலைமை வகித்தார்.
     ஆர்ப்பாட்டத்தில், உயர் மதிப்புள்ள பணத்தாள்கள் மதிப்பிழப்பு நடவடிக்கையைக் கண்டித்தும், பொதுமக்களின் பிரச்னைகளைக் களைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
     காங்கிரஸ் கட்சியின் தருமபுரி மாவட்டத் தலைவர் ராஜாராம் வர்மா, நகரத் தலைவர் செந்தில்குமார், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி ராஜவீரப்பன், சின்னையன், மகளிர் காங்கிரஸ் மாவட்டப் பொறுப்பாளர் துளசியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     அரூரில்...
     அரூரில் காங்கிரஸ் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
     வட்டாட்சியர் அலுவலகம் எதிரே மாவட்ட மகளிர் காங்கிரஸ் மற்றும் மகளிர் சேவாதளம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பாளர் வி.சகுந்தலா வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
     கருப்புப் பணம் ஒழிப்பு என்ற பெயரில் ஏழை, எளிய மக்களை மத்திய அரசு துன்புறுத்தி வருகிறது. ரூ.500 மற்றும் ரூ.1000-நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து நாட்டில் அனைத்துப் பணிகளுக்கும் பாதிக்கப்பட்டுள்ளன.
     எனவே, மக்கள் துன்பங்களை நீக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
     தருமபுரி மாவட்ட மகளிர் சேவாதளம் தலைவர் மணிமேகலை, வட்டார மகளிர் சேவாதளம் தலைவர் உதயகுமாரி ராஜேந்திரன், தருமபுரி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி ஜெ.ராஜாராம்வர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai