சுடச்சுட

  

  மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அளிப்பு

  By தருமபுரி,  |   Published on : 10th January 2017 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வழங்கினார்.
   தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் கே.விவேகானந்தன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
   கூட்டத்தில், குடிநீர், மின் வசதி, பட்டா, கல்வி உதவித் தொகை, தரைமட்டப் பாலம், மூன்று சக்கர வண்டி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, பொதுமக்கள் 394 மனுக்களை அளித்தனர்.
   இதனைத் தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில், இருவருக்கு காதொலிக் கருவி, இருவருக்கு சக்கர நாற்காலி, ஒருவருக்கு முடநீக்கு உபகரணம், ஊன்றுகோல் உள்பட 6 பேருக்கு ரூ.22 ஆயிரத்து 525 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வழங்கினார்.
   கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர், ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இலாஹிஜான், பிற்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, மாற்றுத் திறனாளி நல அலுவலர் மகிழ்நன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai