Enable Javscript for better performance
மின் ஊழியர் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில், தருமபுரி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
     ஆர்ப்பாட்டத்துக்கு, அமைப்பின் தலைவர் ஏ.மாதேசன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் எம்.கிருஷ்ணன், பொருளாளர் பி.ஜீவா, கோட்டத் தலைவர் எஸ்.பி.சுப்பிரமணி, சிஐடியூ மாவட்டத் தலைவர் எம்.மாரிமுத்து உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
     ஆர்ப்பாட்டத்தில், 2012-ஆம் ஆண்டு முதல் பழைய மின் அளவிகளை மாற்றி, புதிய மின் அளவிகளைப் பொருத்தியதற்கான தொகையை வழங்க வேண்டும். நிலுவையிலுள்ள 2015-ஆம் ஆண்டு சென்னை மழை வெள்ளம் பாதிப்பு நிவாரணப் பணிக்கான மும்மடங்கு ஊதியத்தை விரைந்து வழங்க வேண்டும். ஒப்பந்த ஊழியர்கள் பணிக்கான ஊதியத்தை நிலுவையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai