சுடச்சுட

    

    கம்பைநல்லூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த தலைமைக் காவலர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
     தருமபுரி வெண்ணாம்பட்டி குடியிருப்பில் வசித்து வந்தவர் பாரதி (45). தலைமைக் காவலரான இவர், நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வந்தார்.
     இந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை இரவு அலுவலகப் பணி தொடர்பாக மோட்டார் சைக்கிளில் குண்டல்பட்டி பிரிவு சாலை அருகே சென்ற போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாரதியை அக்கம் பக்கத்தினர் மீட்டு தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
     இந்தச் சம்பவம் குறித்து அவரது மனைவி இளையராணி (39) அளித்த புகாரின் பேரில் கம்பைநல்லூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai