ஆதியோகி சிவன் ரதம் தருமபுரி வருகை
By தருமபுரி, | Published on : 11th January 2017 08:33 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
ஈஷா யோகா மையம் சார்பில் ஆதியோகி சிவன் ரதம் செவ்வாய்க்கிழமை தருமபுரி வந்தது.
வரும் மஹா சிவராத்திரியன்று வெள்ளியங்கிரி மலை அருகேயுள்ள ஈஷா யோகா மையத்தில் 112 அடி உயரமுள்ள சிவன் சிலை பிரதிஷ்டை செய்யப்படவுள்ளது.
இதையொட்டி தமிழ்நாடு முழுவதும் 4 மையங்களில் இருந்து ஆதியோகி சிவன் ரதம் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று வருகிறது.
ஒசூரிலிருந்து திங்கள்கிழமை காலை புறப்பட்ட ஒரு ரதம், கிருஷ்ணகிரி, பாலக்கோடு பகுதிகளுக்குச் சென்று, செவ்வாய்க்கிழமை பாப்பாரப்பட்டி, பென்னாகரம் பகுதிகளுக்கு வந்தது. தொடர்ந்து மாலை தருமபுரி நகரப் பகுதிகளில் வலம் வந்தது.
ஏராளமான ஈஷா யோகா மைய பக்தர்கள் ரதத்தை வரவேற்றனர். இதற்கான ஏற்பாடுகளை தருமபுரி ஒருங்கிணைப்பாளர் சுந்தரராஜன் செய்திருந்தார்.