Enable Javscript for better performance
சிறார் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    சிறார் பாதுகாப்பு குறித்து கலந்தாய்வுக் கூட்டம் தொடக்கம்

    By தருமபுரி,  |   Published on : 11th January 2017 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சிறார் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்த இரண்டு நாள் கலந்தாய்வுக் கூட்டம் தருமபுரியில் செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
     தமிழ்நாடு குழந்தைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ராஜமீனாட்சி தலைமை வகித்தார்.
     இக் கூட்டத்தில், தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் செல்வகுமார் பேசியது: தமிழக அரசு குழந்தைகள் பாதுகாப்புக் கொள்கை வரைவில் குழந்தைகள் பங்கேற்பை உறுதி செய்ய உள்ளது. இது தொடர்பாக, தமிழகம் முழுவதும், குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சார்பாக, குழந்தைகள் வாழ்வதற்கான உரிமை, வளர்ச்சிக்கான உரிமை, பாதுகாப்புக்கான உரிமை, பங்கேற்பிற்கான உரிமைகள் குறித்து கலந்தாய்வு நடந்து வருகிறது.
     இதில், குழந்தைகள் கருத்தை வெளிப்படுத்தும் உரிமை, குழுவாக இணையும் உரிமை, தகவல் பெறும் உரிமை, சிந்திப்பதற்கான உரிமை மற்றும் முடிவெடுத்தல் உரிமை, சிந்தனைப்படி நடக்க உரிமை, தன்னிலை குறித்து வாதிடும் உரிமை, திறமையை வெளிப்படுத்துதல், மொழி, கலாசாரம் குறித்து 18 வயது வரையிலான குழந்தைகளுக்கு விளக்கம் அளிக்கப்பட்டு வருகிறது.
     குழந்தைகளின் உரிமைகள் குறித்து அவர்கள் அறிந்து செயல்படவும், அவர்கள் உரிமைகள் குறித்து தெரிந்து கொள்ள வாய்மொழி மற்றும் எழுத்து மூலம் தகவல் பெற்று வருகிறோம். இந்தத் தகவல்கள் அனைத்தும் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்படும் என்றார்.
     தருமபுரியில், இலக்கியம்பட்டி காப்பகம் மற்றும் சைல்டுலைன் குழந்தைகள் என 60 பேர் கலந்து கொண்டனர். கிராமியக் கலைகள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளில் இக்குழந்தைகள் பங்கேற்றனர்.
     இதனைத் தொடர்ந்து இரண்டாம் நாளாக புதன்கிழமை (ஜன.11) மாவட்ட ஆட்சியரகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற உள்ளது.
     மாவட்ட சமூக நல அலுவலர் ரேவதி, சைல்டு லைன் இயக்குநர் செயின்ட்தாமஸ், தேசிய சிறார் தொழிலாளர் ஒழிப்புத் திட்ட அலுவலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai