Enable Javscript for better performance
ரயில் பாதையில் கார் ஓட்டுநர் மர்மச் சாவு- Dinamani

சுடச்சுட

    

    மொரப்பூர் அருகே ரயில் பாதையில் கார் ஓட்டுநர் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     தருமபுரி மாவட்டம், மொரப்பூர் நகரைச் சேர்ந்தவர் சிங்காரவேலன் (50). கார் ஓட்டுநர். இவர் குடும்பத் தகராறு காரணமாக திங்கள்கிழமை இரவு வீட்டில் இருந்து வெளியே சென்றதாகக் கூறப்படுகிறது.
     இந்த நிலையில், ஜோலார்பேட்டை - சேலம் ரயில் பாதையில் தலையில் காயமடைந்த நிலையில் அவர் உயிரிழந்து கிடந்தார்.
     குடும்பத் தகராறு காரணமாக அவர் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா, அல்லது யாரேனும் அவரைக் கொலை செய்து சடலத்தை ரயில் பாதையில் வீசிச் சென்றார்களா என்பது குறித்து சேலம் ரயில்வே போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai