Enable Javscript for better performance
வறட்சியால் காய்ந்துபோன பயிர்கள்: ஆட்சியர் ஆய்வு- Dinamani

சுடச்சுட

    

    வறட்சியால் காய்ந்துபோன பயிர்கள்: ஆட்சியர் ஆய்வு

    By அரூர்,  |   Published on : 11th January 2017 08:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பாப்பிரெட்டிப்பட்டி அருகே வறட்சியால் காய்ந்து போன பயிர்களை மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் அண்மையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
     தருமபுரி மாவட்டத்தில் பருவமழை பொய்த்து போனதால் கடும் வறட்சி நிலவுகிறது. இதனால் விவசாயப் பயிர்கள் காய்ந்துள்ளன. எனவே, பயிர்ச் சேதங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.சங்கர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதிகளில் தம்பிசெட்டிப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, அதிகாரப்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளில் விவசாய நிலங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
     கரும்பு, மஞ்சள், பருத்தி, ராகி, துவரை, உளுந்து, மக்காச்சோளம், வாழை உள்ளிட்ட அனைத்து பயிர் வகைகளையும் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஆய்வின்போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோ.ஆனந்தன், கே.தனபால், வருவாய் ஆய்வாளர்கள் செங்கோட்டையன, ரஞ்சித் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai