சுடச்சுட

    

    விளையாட்டுப் போட்டி: மாற்றுத் திறனாளிகளுக்கு பரிசளிப்பு

    By தருமபுரி,  |   Published on : 11th January 2017 08:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு செவ்வாய்க்கிழமை பரிசுகள் வழங்கப்பட்டன.
     அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில், மாற்றுத் திறனாளி மாணவ, மாணவியருக்கான மாவட்டப் போட்டிகள் அண்மையில் நடைபெற்றன.
     இவர்களுக்கு மாவட்ட விளையாட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி.மகேஸ்வரி பரிசு, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.
     அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் வரவேற்றார். அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன், செந்தில் மெட்ரிக். பள்ளி நிர்வாக அலுவலர் சக்திவேல், மாவட்ட விளையாட்டு அலுவலர் நஞ்சப்பன், உடற்கல்வி ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai