Enable Javscript for better performance
கரும்பு டன்னுக்கு ரூ.4,000 வழங்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    கரும்புக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்க பா.ஜ.க. விவசாய அணி வலியுறுத்தியுள்ளது.
     தருமபுரி பா.ஜ.க. அலுவலகத்தில் அண்மையில் விவசாய அணி செயல் வீரர்கள் கூட்டம் அதன் தலைவர் மாணிக்கம் தலைமையில் நடைபெற்றது. மாவட்டப் பொருளாளர் ஜெயக்குமார், மாநிலப் பொதுச் செயலர் அஜய் பிரபாகர், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் வரதராஜன் ஆகியோர் பேசினர்.
     வறட்சியால் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்கி, அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்க வேண்டும். கரும்புக்கு டன்னுக்கு ரூ.4 ஆயிரம் வழங்கி, லாரி வாடகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai