Enable Javscript for better performance
தடுப்புக் காவலில் ஒருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வழிப்பறி செய்ததாகக் கைதாகி சிறையில் இருக்கும் இளைஞரை தடுப்புக் காவல் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் புதன்கிழமை உத்தரவிட்டார்.
     தருமபுரி மாவட்டம் தொப்பூரைச் சேர்ந்தவர் ராஜா மகன் முத்துராஜ் (27). இவர் வழிப்பறி குற்ற வழக்கில் தொப்பூர் போலீஸாரால் கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். இவர் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக தமிழ்நாடு தடுப்புக் காவல் சட்டம் 1982-ன் கீழ் அடைக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரைத்தார். பரிந்துரையின்பேரில், முத்துராஜுவை தடுப்புக் காவலில் சிறையில் அடைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் புதன்கிழமை உத்தரவிட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai