சுடச்சுட

  

  பொங்கல் போனஸ் ரூ. 7 ஆயிரம் மற்றும் தடையின்றி ஊதியம் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் புதன்கிழமை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
   தருமபுரியில் வட்டத் தலைவர் ஜி. மணிவேல் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் எம். சுருளிநாதன், மாவட்டத் துணைத் தலைவர் எஸ்.கே. கனகராஜ் ஆகியோர் பேசினர்.
   பென்னாகரத்தில் வட்டத் தலைவர் கே. லட்சுமி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் ஏ. சேகர், மாவட்ட இணைச் செயலர் சி. காவேரி உள்ளிட்டோர் பேசினர். காரிமங்கலத்தில் வட்டத் தலைவர் பி. நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எம். சிவப்பிரகாசம், இணைச் செயலர் பி. ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பேசினர்.
   அரூரில் வட்டத் தலைவர் கே. சுவாமிநாதன் தலைமை வகித்தார். மாவட்டத் துணைத் தலைவர் எம். யோகராசு, மாவட்டத் துணைத் தலைவர் பி.எஸ். இளவேனில் உள்ளிட்டோர் பேசினர்.
   பாலக்கோட்டில் வட்டத் தலைவர் குணசேகரன் தலைமையிலும், நல்லம்பள்ளியில் வட்டத் தலைவர் மோகன்ராஜ் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்ட கோரிக்கைகள்:
   எந்த நிபந்தனையுமின்றி தமிழக அரசு அனைத்து ஊழியர்களுக்கும் பொங்கல் போனஸாக ரூ. 7 ஆயிரம் வழங்க வேண்டும். மேலும் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மாத ஊதியம் பெறுகின்ற அரசு ஊழியர்களும் தங்கள் வங்கி கணக்கில் பணம் இருந்தும் எடுக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.
   எனவே, நெருக்கடி தீரும் வரை பணம் எடுக்க மாற்று வழியைப் பின்பற்றி ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai