Enable Javscript for better performance
நச்சுப் புகையில்லா போகி: ஆட்சியர் வேண்டுகோள்- Dinamani

சுடச்சுட

    

    நச்சுப் புகையில்லா போகி: ஆட்சியர் வேண்டுகோள்

    By தருமபுரி,  |   Published on : 12th January 2017 08:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டத்தில் நிகழாண்டு போகிப் பண்டிகையை நச்சுப் புகையில்லாமல் கொண்டாட பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
     இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் பழையன கழிதல் என்ற வழக்கத்தின் அடையாளமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
     பழைய கிழிந்த பாய்கள், துணிகள், துடைப்பங்கள் மற்றும் விவசாயக் கழிவுகளைத் தீயிட்டுக் கொளுத்துவது கிராமங்களில் கடைப்பிடிக்கப்படும். ஆனால், தற்போது மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர்கள், ரப்பர், பிளாஸ்டிக் உள்ளிட்ட செயற்கையான பொருள்களை எரிக்கும்போது நச்சுப் புகை மூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல், நுரையீரல், கண், மூக்கு எரிச்சல் உள்ளிட்ட பல பிரச்னைகள் ஏற்படுகின்றன.
     எனவே, பழைய மரம், வறட்டியைத் தவிர்த்து வேறு எதையும் எரிக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, தருமபுரி மாவட்ட மக்கள் போகிப் பண்டிகையை நச்சுப் புகையில்லாமல் கொண்டாட வேண்டும்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai