சுடச்சுட

    

    பாலக்கோடு பகுதியில் பொங்கல் பரிசுப் பொருள்கள்: அமைச்சர் வழங்கினார்

    By தருமபுரி,  |   Published on : 12th January 2017 08:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தருமபுரி மாவட்டம், பாலக்கோடு, கெரகோடஅள்ளி, காரிமங்கலம், தீர்த்தகிரி நகர் ஆகிய பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவுச் சங்க வளாகங்களில் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசின் விலையில்லா வேட்டி, சேலை மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்புகளை குடும்ப அட்டைதாரர்களுக்கு மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் புதன்கிழமை வழங்கினார்.
     நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். கோட்டாட்சியர் ராமமூர்த்தி, இணைப் பதிவாளர் பாண்டியன், துணைப் பதிவாளர்கள் ஆர். மணிகண்டன், சரவணன், தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கத் தலைவர்கள் கே. சம்பத், பி. செந்தில்குமார், கிரி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள 1,007 நியாயவிலைக் கடைகளும், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 40 நியாயவிலைக் கடைகளிலுமாக மொத்தம் 1,047 நியாயவிலைக் கடைகளிலும் வேட்டி-சேலை மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது.
     3,827 பேருக்கு மிதிவண்டிகள்: பாலக்கோடு அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 3,827 மாணவிகளுக்கு ரூ. 12.57 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் கே.பி. அன்பழகன் புதன்கிழமை வழங்கினார். நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கே. விவேகானந்தன் தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கே.பி. மகேஸ்வரி, கோட்டாட்சியர் ராமமூர்த்தி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. சண்முகசுந்தரம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
     
     
     
     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai