Enable Javscript for better performance
இ.ஆர்.கே. கல்லூரியில் உணவுத் திருவிழா- Dinamani

சுடச்சுட

    

    அரூரை அடுத்த எருமியாம்பட்டி இ.ஆர்.கே. மகளிர் கல்லூரியில் உணவுத் திருவிழா அண்மையில் நடைபெற்றது.
     இ.ஆர்.கே. கல்வி நிறுவனங்களின் தாளாளர் இ.ஆர்.செல்வராஜ் தலைமை வகித்தார்.
     இதில், இயற்கை உணவுப் பொருள்கள், உணவு பழக்க வழக்கங்கள், துரித வகை உணவுகளால் ஏற்படும் தீமைகள், உணவில் கலப்படம் செய்யும் முறைகள், கலப்படங்களைக் கண்டறியும் முறைகள், தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் உள்ளிட்டவைகள் குறித்து அரசு மருத்துவர்கள் கௌரிசங்கர், சுதா ஆகியோர் பேசினர்.
     இந்த உணவுத் திருவிழா கண்காட்சியில் சிறுதானியங்கள், பழவகைகள், பாரம்பரிய உணவு வகைகள் இடம் பெற்றிருந்தன.
     விழாவில் இந்தியன் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஏ.கே.பழனியப்பன், காவல் ஆய்வாளர் முத்து கிருஷ்ணன், கல்லூரி முதல்வர் அ.பால்வண்ணன், துணை முதல்வர் த.சக்தி, நிர்வாக அலுவலர் அருள்குமார், தமிழ்த் துறைத் தலைவர் கோ.புவனேஸ்வரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
     கல்லூரி வளாகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவியர் பாரம்பரிய உணவு வகைகளை செய்து கண்காட்சியில் வைத்திருந்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai